விழுப்புரம் அருகேயுள்ள அய்யன்கோவில்பட்டு கிராமத்தில், விநாயகர் சிலைகளுக்கு வண்ணம் பூசும் பணியில் தொழிலாளர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 7ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அய்யன்கோவில்பட்டு பகுதியில், காகிதக்கூழ் மூலம் தயாராகும் விநாயகர் சிலைகளுக்கு இறுதிக்கட்டமாக வண்ணம் பூசும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மூலப்பொருட்களின் விலையேற்றத்தால் இந்தாண்டு விநாயகர் சிலைகளின் விலை 2 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.