மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விவகாரத்தில், அனைத்து மாநில தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மருத்துவமனைகள் மற்றும் அதிக அளவில் குற்றம் நடைபெறும் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் நிறுவவேண்டும்” எனவும், “அவை முறையாக செயல்படுகிறா என்பதை உறுதி செய்யவேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், “சுகாதாரப்பணியாளர்களுக்கு எதிராக விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றால், அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
“மருத்துமனைகளில், குடியிருப்புவாசிகள் மற்றும் மாணவர்கள் அடங்கிய குழுக்களை ஏற்படுத்தவேண்டும்” என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, “நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.