மதுரையில், “100 வார்டுகளில் போலீசார் – பொதுமக்களை இணைக்கும் வகையில் வாட்ஸ்அப் குழுக்குளை உருவாக்கி, அதன் மூலம் மக்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் 14 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 180 மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது. அப்போது கந்துவட்டி, வரதட்சணை மற்றும் ஆள்கடத்தல் உள்ளிட்ட புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன.