உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் தகுதி சுற்றில் அர்ஜெண்டினா அணி அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது.
23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2026-ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் நடக்க உள்ளது. இதில், தகுதி பெறுவதற்கான சுற்று பரான்கியாவில் நடைபெற்றது.
இதன் முதல் ஆட்டத்தில் கொலம்பியா அணியும் அர்ஜெண்டினா அணியும் மோதியது. பின்னர் ஆட்ட இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை கொலம்பியா அணி தோற்கடித்தது.