கலிபோர்னியாவில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயால் கரும்புகை சூழ்ந்து காட்சியளிக்கிறது.
கடந்த சில வாரங்களாக கலிபோர்னியாவின் பல்வேறு பகுதிகளில் கடும் வெப்ப அலை வாட்டி வதைத்து வந்தது. இதன் காரணமாக வனப்பகுதிகளில் தீப்பற்றி எரிந்து வருகிறது. இதனை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.
இதன் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.