தொடர்விடுமுறை காரணமாக இன்று முதல் தமிழகத்தின் பல இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
வார இறுதி நாட்கள், முகூர்த்தம் மற்றும் மிலாடி நபி ஆகிய தொடர் விடுமுறையை ஒட்டி இன்றும், நாளையும் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கு பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களுக்கு கூடுதலாக 955 பேருந்துகள் இயக்கப்படும் எனவும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, உள்ளிட்ட இடங்களுக்கு 190 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான டிக்கெட்டுகளை www.tnstc in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.