மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக டாக்டர் சுதா சேஷய்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய கல்வி அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சுதா சேஷய்யன் 3 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் நீடிப்பார் என்று மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள நியமன கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கல்வி அமைச்சகத்தின் ஒப்புதலில் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.