பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் 170 நாடுகளைச் சேர்ந்த 4,400-க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 18-வது இடம் பிடித்தது. பின்னர் நாடு திரும்பிய இந்திய அணி வீர்ர்களுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து நாடு திரும்பிய வீரர்கள் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அவர்களுக்கு பிரதமர் மோடி பரிசு வழங்கினார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி விடுத்துள்ள பதிவில், பாராலிம்பிக் சாம்பியன்கள் இதுவரை இல்லாத வகையில் அதிக பதக்கங்களை பெற்றுள்ளதாகவும், அவர்களுடன் உரையாடியது மகிழ்ச்சியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.