தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப்-2 தேர்வு நாளை நடைபெறுகிறது.
தமிழக அரசு துறைகளில், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்-பதிவாளர், தலைமைச்செயலக உதவி பிரிவு அலுவலர் உள்ளிட்ட காலியாக உள்ள 507 பணியிடங்களுக்கு குரூப் – 2 மூலமாகவும் , பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ஆயிரத்து 820 காலிப் பணியிடங்களுக்கு குருப் -2A என்ற தேர்வின் மூலமாகவும் பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
இந்த தேர்வுகள் நாளை தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 763 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. மொத்தம் 7 லட்சத்து 93 ஆயிரத்து 947 பேர் தேர்வெழுத உள்ள நிலையில் குருப் 2 மற்றும் 2-A பணிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.