மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் சென்னையில் ஏற்பட்ட மின் தடை போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 100 சதவீதம் சரி செய்யப்பட்டது.
சென்னை மணலியில் உள்ள துணை மின் நிலையத்தில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் எழும்பூர், வேப்பேரி, சென்ட்ரல், மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகள் இருளில் மூழ்கியது.
சுமார் 2 அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த மின் தடையால் பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்து கடும் அவதியடைந்தனர். இந்நிலையில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சென்னை மாநகரம் முழுவதும் 100 சதவீதம் மின்சாரம் சீர் செய்யப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.