மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.
மணலியில் உள்ள துணை மின் நிலையத்தில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கட்டுப்பாட்டு அறையில் உயர் அழுத்த மின் வழித்தடத்தில் ஏற்பட்ட லேசான உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சென்னை எழும்பூர், வேப்பேரி, சென்ட்ரல், மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகள் இருளில் மூழ்கின. சுமார் 2 அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த மின் வெட்டால் பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்து கடும் அவதியடைந்தனர்.
மேலும், சாலைகளிலும் இருள் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்தனர். இதனையடுத்து மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல, திருவள்ளூர் மாவட்டம் அலமாதியில் உள்ள மின் நிலையத்திலும் தீ பத்து காரணமாக மின்சார சேவை பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.