புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையையொட்டி சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகரில் உள்ள பிரசித்திப் பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயலில் விசேஷ தினங்களில் மட்டுமே பக்தர்கள் மலை ஏறி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பிரதோஷத்தை ஒட்டியும், மகாளய அமாவாசையை முன்னிட்டும் இன்று முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.