காரைக்குடியில் இருந்து சென்னை புறப்பட்ட பல்லவன் விரைவு ரயிலில் பிரேக் பழுதானதால் ரயில் வழியில் நிறுத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து தினசரி காலை 5.35 மணிக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 18 பெட்டிகளுடன் சென்னை எழும்பூருக்கு புறப்பட்ட ரயிலின் பிரேக் பழுதானது. இதனால் கோட்டையூர் – செட்டிநாடு ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து ஊழியர்கள் மூலமாக பிரேக் சரிசெய்யப்பட்ட நிலையில், 25 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.