பைக் டாக்ஸி சேவையை அங்கீகரிக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது.
ரேபிடோ, உபர் போன்ற நிறுவனங்களின் பயன்பாட்டை ஒப்பந்த வாகன சட்டத்தின் கீழ் கொண்டு வர மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
மேலும் சிறார்களால் ஓட்டப்படும் இருசக்கர வாகனத்தால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது எனவும் அதனை தடுக்க வேக வடிவமைப்பு மாற்றி அமைக்கப்படுகிறது எனவும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த திருத்தங்கள் அமைச்சகத்தின் அதிகார வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வரும் 15ம் தேதி வரை பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் எனவும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.