விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மூன்றரை ஆண்டுகளாக குடிநீருக்கு போராடி வருவதாகக் கூறி அமைச்சர் பொன்முடியிடம், திமுக ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வி.புத்தூர் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினரும், வனத்துறை அமைச்சருமான பொன்முடி கலந்துகொண்டார்.
அப்போது, வி.புத்தூர் ஊராட்சி மன்ற தலைவி பூர்ணிமவின் கணவர் சிவராஜ் என்பவர், மூன்றரை ஆண்டுகளாக குடிநீர் வேண்டி போராடி வருவதாக தெரிவித்தார். இதனைக் கேட்ட அமைச்சர் மூன்றரை ஆண்டு காலமாக போராடினாயா என அலட்சியமாக கேட்டார். தற்போது தான் தமக்கு தெரியவருவதாகவும் அவர் கூறினார்.