சிறைகளில் சாதிய பாகுபாடு இல்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறைகளில் சாதிய அடிப்படையிலான பாகுபாடுகள் உள்ளதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், அரசியலமைப்பு சட்டங்கள் குடிமக்களின் கண்ணியத்தையும், சமத்துவத்தையும் நிலைநிறுத்த வேண்டும் என கூறினர்.
சாதிய பாகுபாட்டால் பட்டியலினத்தவரின் கண்ணியம், சம உரிமை மறுக்கப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது எனவும் குறிப்பிட்டனர்.
சிறை கைதிகள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டால் அதற்கு அரசே முழு பொறுப்பு என தெரிவித்த நீதிபதிகள், சாதிய பாகுபாடு இல்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.