மதுவிலக்கு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு மதுப்பிரியர்களை போல் தள்ளாட்டத்தில் உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், திமுகவை சேர்ந்த மது ஆலை அதிபர்களின் கஜானாவை நிரப்புவதற்காக மட்டுமே திமுக அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
அண்டை மாநிலங்களில் மது விற்பனை செய்யப்படும் போது தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாது என அமைச்சர் ரகுபதி கூறுவது போலி சாக்குகள் சொல்வதைப் போன்றது என தெரிவித்துள்ள அவர், மதுவிலக்கை அமல்படுத்தாவிட்டால் திமுக அரசு தோல்வியை ஒப்புக்கொண்டு பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.