நாட்டின் நலன் கருதி அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுமாறு தம்பதிகளுக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், வரும் ஆண்டில் தென்னிந்தியாவில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்பதால், தம்பதிகள் கூடுதல் குழந்தைகளை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளும் தம்பதிகள் மட்டுமே ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வகையில், சட்டத் திருத்தம் கொண்டுவரப் போவதாகவும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.