கடத்தல் சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி போலீசார் இடையே மோதல் வெடித்தது.
ராஜா என்பவர் கொடுத்த தகவலின் பேரில், புதுச்சேரி மடுகரை சாராயக் கடையில் சோதனை நடத்திய தமிழக போலீசார், அங்கிருந்த சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதற்கு புதுச்சேரி போலீசார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இரு மாநில போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், கைப்பற்றிய சாராய பாக்கெட்டுகள் உள்ளிட்டவைகளை புதுச்சேரி போலீசாரிடம் தமிழக போலீசார் ஒப்படைத்தனர்.