மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் மகாயுதி கூட்டணிக்கு கிடைத்த வெற்றியானது, பிரதமர் மோடியின் தலைமைத்துவத்துக்கு கிடைத்த வெற்றி என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு புகழாரம் சூட்டினார்.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த வெற்றி பெற்றமைக்காக மகாயுதி கூட்டணிக்கு பாராட்டுகள் என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் வியூக ரீதியிலான இலக்கு, கொள்கை மற்றும் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான முனைப்பு ஆகியவற்றின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை தேர்தல் வெற்றி பறைசாற்றுவதாக சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.