பிரதமர் மோடியின் தலைமை மற்றும் தொலைநோக்கு பார்வையால் உத்தர பிரதேச இடைத்தேர்தலில் பாஜக அமோக வெற்றிப்பெற்றுள்ளதாக, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 6 இடங்களில் பாஜக வெற்றிப்பெற்றுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், நாட்டு மக்கள் பிரதமர் மோடி மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், மகாராஷ்டிராவில் பாகஜ கூட்டணி வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றியை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.