சமூகத்தைப் பிளவுபடுத்தியவர்கள் படுதோல்வியைச் சந்திக்க வேண்டும் என்ற செய்தியை மகாராஷ்டிர தேர்தல்முடிவு வெளிப்படுத்தியுள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
டெல்லி பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற வெற்றி விழாவில் உரையாற்றிய அவர், சாதி, மதம் உள்ளிட்டவற்றின் பெயரால் மக்களைப் பிரித்து அதிகாரத்தைப் பிடிக்கும் எண்ணம் இந்தியா கூட்டணிக்கு இருந்து வந்ததாக விமர்சித்தார்.
மேலும், மகாராஷ்டிரா மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடியின் கொள்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளில் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதை தெளிவுப்படுத்தியுள்ளதாக ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.