சென்னை அருகே நடைபெற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் தா.மோ.அன்பரசன், பொது மக்களிடம் ஒருமையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட, மூவரசம்பட்டு முதல்நிலை ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, கழிவறை தேவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொது மக்கள் முன்வைத்தனர். இதனால், ஆவேசமான அமைச்சர் தா.மோ. அன்பரசன், கழிவறையை தாம் கட்டித் தருகிறேன், நீ சுத்தம் செய்கிறாயா? எனவும், உன்னால் பராமரிக்க முடியுமா? என்றும் ஒருமையில் பேசியதால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.