தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் 3 மாத படிப்பை முடித்துவிட்டு இன்று தமிழகம் திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியார்களிடம் பேசிய அவர், லண்டனுக்கு சென்று படித்ததில் பெரிய ஆளுமைகள் குறித்து தெரிந்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்தார். இந்தியா மீது மேற்கத்திய நாடுகள் எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பதை கண்கூடாக பார்க்க முடிந்ததாகவும் அவர் கூறினார். இந்த வாய்ப்பு மிகப்பெரிய பாக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு விஜய்யை வரவேற்கிறோம். வரும் காலங்களில் அவர் குறித்து பேச வேண்டியதை பேசுகிறோம். மாநாட்டில் பாஜகவையும்அவர் விமர்சித்துள்ளார். விஜய் ஆக்டிவ் பாலிடிஸ்க் வரும்போது பாஜக விமர்சிக்கும் என தெரிவித்தார்.
பாஜகவின் பாதங்கள் பலமாக உள்ளது. விஜயின் கொள்கைகள் கிட்டத்தட்ட திராவிட கட்சியோடு ஒன்றுள்ளது. புதியவர்களை பார்த்து பாஜக பயந்தது கிடையாது என்றும் அண்ணாமலை கூறினார். மராட்டியம், ஹரியானா என தேர்தல் வெற்றிகள் பாஜக பலத்தை காட்டுகிறது. பாஜகவின் பாதங்கள் பலமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த 3 மாதமாக பாஜகவை ஹெச்.ராஜா சிறப்பாக வழிநடத்தியதாக கூறிய அண்ணாமலை அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
உதயநிதிக்கு வேகமான வளர்ச்சி.. அமைச்சர், துணை முதல்வர் என வளர்ச்சி அடைந்து இருக்கிறார். துணை முதல்வர் உதயநிதியை விமர்சிக்கும் நேரத்தில் விமர்சிப்போம் என்றும் அவர் கூறினார். திராவிட கட்சிகள் மூன்றாக பிரிந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி குறித்த கேள்விக்கு இந்தியாவில் ஆம் ஆத்மி மற்றும் திமுக மட்டும் வித்தியாசமான பாதையில் பயணிக்கிறது என்றும், நிரபராதியை கொண்டாடுவது போல முதல்வர் செந்தில் பாலாஜியை கொண்டாடுகிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சீமான் குறித்து கேள்விக்கு சீமான் பாதை தனி என்றும் பாஜக பாதை தனி என்றும் தெரிவித்தார். அவர் பாஜகவை காரசாரமாக விமர்சிப்பதாகவும் கூறினார். 2026 மிக முக்கிய தேர்தல். என்றும் 2026 புதிய களமாக இருக்கும் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்
கடந்த 3 மாதங்களாக அமைப்பு ரிதீயாக பாஜக பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் 2010 ஆம் ஆண்டில் இருந்து உறுப்பினர் எண்ணிக்கையில் 8 மடங்கு உயர்ந்துள்ளதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.
சென்னை பழைய தன்மையை இழந்து புயல் பாதையாக மாறியுள்ளதாகவும், முதல்வர் உயர்மட்ட scientific குழு அமைக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கூறினார்.