மேட்டுப்பாளையம்- உதகை இடையிலான மலை ரயில் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள மலை ரயில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து தினந்தோறும் உதகைக்கு இயக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும், நாளையும் மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான ரயில் போக்குவரத்தை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் முன்பதிவு செய்து காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.