வெள்ள பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல புதுச்சேரி இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
ஃபெஞ்சல் புயல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடந்தது. இதனால், புதுச்சேரியில் கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு 48 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இதனால், புதுச்சேரி வெள்ளக்காடாக காட்சியளித்தது. பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்த நிலையில், மக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. மேலும், புயல் மற்றும் கனமழையால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தத்தளித்த ஏராளமானோரை ராணுவத்தினர் துரிதமாக செயல்பட்டு மீட்டனர்.
வெள்ளம் வடிந்து வரும் நிலையில், சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மெல்ல மெல்ல புதுச்சேரி இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.