கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வீராணம் ஏரி நிரம்பி வருகிறது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. சென்னையின் முக்கிய ஆதாரமாக திகழ்ந்து வரும் இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால்
47.50 அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரி நிரம்பி வருகிறது.
இதனையடுத்து வீராணம் ஏரி அணையின் பாதுகாப்பு கருதி ஏரியின் பிரதான வடிகால் மதகான வெள்ளியங்கால் ஓடை திறக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏரியின் நீர் மட்டம் 46.50 அடியாக உள்ள நிலையில் விரைவில் முழுக் கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.