பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டாவின் 64வது பிறந்தநாளையொட்டி பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஜெ.பி.நட்டா அனைத்து பொறுப்புகளையும் திறம்பட வகித்து, ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருபவர் என பாராட்டியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், சுகாதாரத் துறையை வலுப்படுத்துவதில் பாராட்டத்தக்க பங்களிப்பை ஜெ.பி.நட்டா செய்து வருவதாகவும், அவர் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்க இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.