பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு இரு வழக்குகளில் விதிக்கப்பட்ட தலா 6 மாத சிறை தண்டனையை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
2018ம் ஆண்டு பெரியார் சிலை தொடர்பாக ஹெச். ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் திமுக எம்.பி கனிமொழி குறித்தும் விமர்சனம் செய்ததாக குற்றசாட்டு எழுந்தது. .
இதுகுறித்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் புகார் தெரிவித்த நிலையில், அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஹெச்.ராஜாவுக்கு இரு வழக்குகளிலும் தலா 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவுள்ளதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என ஹெச். ராஜா தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டவே, தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.