அதானி விவகாரம், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி இண்டி கூட்டணியை சேர்ந்த எம்.பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கிய நிலையில், இதுவரை நடந்த 5 நாட்கள் அமர்வும் கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் இரு அவைகளும் கூடியது. அப்போது, அதானி விவகாரம், தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் பாதிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க கோரி, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.