பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதலை சுட முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.
பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும் அகாலி தள கட்சியின் தலைவருமான சுக்பிர் சிங் பாதல் இன்று அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் நுழைவாயிலில் கழுத்தில் “தவறு செய்துவிட்டோம்.. மன்னித்துக் கொள்ளுங்கள்” என்ற பதாகையுடன் வீல்சேரில் அமர்ந்திருந்தார்.
மேலும், பொற்கோயிலில் பாத்திரங்களைக் கழுவி, கழிப்பறையைச் சுத்தம் சுத்தம் செய்யும் தண்டனையை நிறைவேற்றினார்.
அப்போது ஒரு நபர் அவரை சுட முயற்சித்தார். அப்போது அங்கிருந்த நபர்கள் அந்த நபரை தடுத்து நிறுத்தினர். இதனால் சுக்பீர் சிங் பாதல் காயம் இன்றி தப்பினார். துப்பாக்கி சூடு நடத்தியவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.