நெல்லை மாவட்டம் வள்ளியூரில் செப்டிக் டேங்க் குழியில் தவறி விழுந்து திமுக பிரமுகர் உயிரிழந்தார்.
வள்ளியூர் புதிய பேருந்து நிலையத்தில் கழிவறை கட்டுவதற்காக நகராட்சி சார்பில் செப்டிக் டாங்க் குழி அமைக்கப்பட்டிருந்தது. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி கட்டுமான பணிகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சொக்கநாதபுரம் கோயில் தெருவை சேர்ந்த திமுக பிரமுகர் முருகன், புதிய பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக செப்டிக் டாங்க் குழியில் தவறி விழுந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் முருகனின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.