விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடித்துள்ள நேசிப்பாயா படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் முரளியின் மகனும் நடிகர் அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். இதில் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார்.
இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சியில் விஷ்ணுவர்தன், ஆகாஷ் முரளி, அதர்வா, அதிதி, சரத்குமார், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.