சத்தீஸ்கரில் சாலை அமைக்கு திட்டத்தில் 120 கோடி ரூபாய் ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் முகேஷ் சந்த்ரகர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.
அந்நபர் ஹதராபாத்தில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் முன்னதாக ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.