ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெறுகிறது. 10ம் தேதி முதல் 17ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். அதன்படி நாளை வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 53 வாக்குப்பதிவு மையத்தில் உள்ள 237 வாக்குச்சாவடியில், 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்ய ஏதுவாக தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், மாநகராட்சி அலுவலகத்தில் 13 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது-