திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யாமல் உள்ள திமுக அரசை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கடந்த நவம்பர் 29-ம் தேதி படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாததை கண்டித்து கொடுவாய் பகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், செந்தில்வேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, திமுக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.