பல்லடம் மூவர் கொலை வழக்கில் நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் - அண்ணாமலை உறுதி!
Sep 12, 2026, 12:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பல்லடம் மூவர் கொலை வழக்கில் நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் – அண்ணாமலை உறுதி!

Murugesan M by Murugesan M
Jan 10, 2025, 09:36 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பல்லடம் மூவர் கொலை வழக்கில் நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது :

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டன்பாளையத்தில், ஒரே குடும்பத்தில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட குற்றச் சம்பவத்தில், 42 நாட்கள் ஆகியும், இன்னும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல் இருக்கும் திமுக அரசைக் கண்டித்து, இன்று பொங்கலூர் கொடுவாய் பகுதியில் திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர்  செந்தில்வேல் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டோம்.

தொடர்ந்து சில ஆண்டுகளாகவே இந்தப் பகுதியில், தனியாக இருப்பவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதையும், எந்த வழக்கிலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல் இருப்பதையும் கருத்தில் கொண்டு, கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 28 அன்று நடைபெற்ற இந்தப் படுகொலை சம்பவத்தை, சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று, கடந்த டிசம்பர் 6 அன்று, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு  தமிழக பாஜக சார்பாக கடிதம் எழுதினோம்.

அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டவுடன், சிபிஐ விசாரணைக்கு தமிழகத்திலிருந்த அனுமதியை உடனடியாக ரத்து செய்துவிட்டார் முதலமைச்சர்.

இதனால், இந்த வழக்கை சிபிஐ தன்னிச்சையாக விசாரிக்க முடியாமல், தமிழக அரசு அனுமதிக்காகக் காத்திருக்க நேர்ந்திருக்கிறது. சிபிஐ விசாரணை கோரி முதலமைச்சருக்குக் கடிதம் எழுதி ஒரு மாதம் கடந்தும், இன்னும் குற்றவாளிகளைக் கைது செய்யவோ, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவோ திமுக அரசு நடவடிக்கை மேற்கொள்ளாததால், பொங்கலூர் ஒன்றியத்தில், 50,000 பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று, பொதுமக்களோடு ஆளுநரைச் சந்தித்து, மூவர் படுகொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிக்கை வைக்கவிருக்கிறோம்.

பொதுக்கூட்டத்தில், தமிழக பாஜக மாநில மாநிலப் பொதுச்செயலாளர் ஏபி.முருகானந்தம் , தமிழக பாஜக விவசாயிகள் அணி மாநிலத் தலைவர் கரு.நாகராஜன், , மாவட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கத் தொடர்ந்து உழைத்து வரும் திருப்பூர் மாவட்டம், பல்லடம், பொங்கலூர் பகுதி தலைவர்கள் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிச்சயம், இந்த வழக்கில், குற்றவாளிகளைக் கைது செய்து, எந்தத் தவறும் செய்யாமல் உயிரிழந்த அப்பாவிகளின் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கும்வரை,  தமிழக பாஜக தொடர்ந்து போராடும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: Tirupurpalladam murder casebjp protestDMK governmentBJP State President AnnamalaiPalladam
Share
Tweet
SendShare
Previous Post

பல்லடம் 3 பேர் கொலை வழக்கு – அண்ணாமலை தலைமையில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!

Next Post

தமிழ்மொழியை அனைவரும் கற்க வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies