7,360 கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது? : அண்ணாமலை கேள்வி!
Aug 24, 2025, 09:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

7,360 கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது? : அண்ணாமலை கேள்வி!

Web Desk by Web Desk
Feb 11, 2025, 07:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கௌரவ விரிவுரையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை, உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, பொய் சொல்லிப் புறக்கணிக்கும் அளவுக்கு, திமுக அரசுக்கு அவர்கள் மீது என்ன கோபம்?  என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகம் முழுவதும் உள்ள 171 அரசுக் கல்லூரிகளில் 7,360 கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு 11 மாத காலம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கௌரவ விரிவுரையாளர்கள் அனைவருமே, பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைக்கும், கல்லூரி உதவிப் பேராசிரியருக்கான கல்வித் தகுதியைப் பெற்றவர்கள் மட்டுமின்றி, அவர்களில் பலர், சிறப்புத் தேர்வு எழுதி பணி வாய்ப்பையும் பெற்றவர்கள்.

நிரந்தரப் பணியில் இருப்பவர்கள் ஊதியம் சுமார் 80,000 ரூபாயாக இருக்கையில், முறையான தகுதியின் அடிப்படையில் தேர்வான கௌரவ விரிவுரையாளர்களுக்கான தொகுப்பு ஊதியம் வெறும் ரூ.20,000 முதல் ரூ.25,000 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரையின்படி, கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.50,000 மாதச் சம்பளமாக வழங்கப்பட வேண்டும். கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம், இவர்களுக்கு, பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்த ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் திமுக அரசை வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை, ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.

தமிழகத்தில், பெரும்பாலான கல்லூரிகள் கௌரவ விரிவுரையாளர்களைக் கொண்டே செயல்படுகின்றன. இவர்கள், பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளின்படி, உரிய தகுதியின் அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டவர்கள்.

பல கல்லூரிகளில், பல்வேறு துறைகளில் துறைத் தலைவர்கள் இல்லாததால், அவர்கள் பணிகளையும், கௌரவ விரிவுரையாளர்களே, மேற்கொண்டு வருகின்றனர். பல கல்லூரிகளில், கற்பித்தல் பணியோடு கல்லூரியில் இருக்கும் அனைத்து பணிகளையும் மேற்கொள்பவர்கள் இவர்கள்தான். ஆனால், இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகக் குறைவு.

இந்த நிலையில், உரிய தகுதியுடன் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்கள், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அனைவருக்கும் ரூ.50,000 ஊதியம் வழங்கக் கூறி மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் 21.3.2024 அன்று தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை, தமிழக உயர் கல்வித்துறை  நடைமுறைப்படுத்தாததால், மீண்டும்  கௌரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்த 11 வழக்குகளில், 18.10.2024 அன்றும், மேலும் 20 வழக்குகளில், 21.11.2024 அன்றும், கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதம், ரூ.50,000 ஊதியம் வழங்க வேண்டும் என்று, மாண்புமிகு நீதியரசர்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளை பின்பற்றித்தான் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் நடைபெற்றுள்ளது என, கல்லூரிக் கல்வி ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் தொடர்பாக, தமிழ்நாடு உயர்கல்வித் துறை ஏற்கனவே வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படியே, அனைவரும் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், தற்போது, தமிழகத்தில் பணியாற்றக்கூடிய கௌரவ விரிவுரையாளர்கள் எவரையும் பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி நியமிக்கவில்லை என்றும், அதனால், மானியக் குழு பரிந்துரைத்துள்ள மாதம் ரூ.50,000 ஊதியம் வழங்க இயலாது என்றும், பொய்யான விளக்கத்தை அளித்துள்ளது திமுக அரசு.

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பைக் கூட மதிக்காமல், கௌரவ விரிவுரையாளர்களை வஞ்சித்து வரும் திமுக அரசின் செயல்பாடு முற்றிலும் கண்டிக்கத்தக்கது. நீதிமன்றத்தில் பொய்யான விளக்கம் கொடுத்து, அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களை ஏமாற்றியதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் கௌரவ விரிவுரையாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்திலும் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், அரசுக் கல்லூரி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. கௌரவ விரிவுரையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை, உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, பொய் சொல்லிப் புறக்கணிக்கும் அளவுக்கு, திமுக அரசுக்கு அவர்கள் மீது என்ன கோபம்?

உடனடியாக, தமிழக அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு, மானியக் குழு பரிந்துரையின்படி ரூ.50,000 ஊதியம் வழங்க வேண்டும் என்றும், ஊதிய உயர்வு கோரி நியாயமான போராட்டத்தில் ஈடுபடுகின்ற கௌரவ விரிவுரையாளர்களை அச்சுறுத்தும் விதமாக, கல்லூரி முதல்வர்கள், கல்லூரிக் கல்வி இணை இயக்குனர்கள் செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். மேலும், தமிழகத்தில் பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டுதலின்படி நியமிக்கப்பட்டுள்ள கௌரவ விரிவுரையாளர்கள் எத்தனை பேர், பல்கலைக்கழக மானியக் குழு வழங்கும் நிதியை, திமுக அரசு எந்த வழிகளில் செலவிடுகிறது என்ற வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்றும் திமுக அரசை அண்ணாமலை  வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக, கௌரவ விரிவுரையாளர்களுக்கான முதல் மாத ஊதியமே இன்னும் வழங்கப்படவில்லை எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், முதல் மாத ஊதியத்தை, மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குத் தாமதப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.

எனவே, எந்தவித காலதாமதமும் இல்லாமல், ஒவ்வொரு மாதமும் கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியத்தை, அந்தந்த மாத இறுதியில் வழங்க வேண்டும் என்றும், கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எண் 56ன் படி, புதிய விரிவுரையாளர்கள் பணி நியமனத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கௌரவ விரிவுரையாளர்களாகப் பணிபுரியும் தகுதி வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டும் என்றும் திமுக அரசை அண்ணாமலை  வலியுறுத்தியுள்ளார்.

Tags: tn govtWhen will honorary lecturers get salary hike? : Annamalai question!DMKbjp k annamalaiMK Stalinஅண்ணாமலை கேள்வி
ShareTweetSendShare
Previous Post

பள்ளி மாணவ – மாணவிகளை ஆபாச வார்த்தைகளால் திட்டிய திமுக பிரமுகர்!

Next Post

பள்ளி மாணவர்களின் கல்வியில் நேர்மையற்ற அரசியல் செய்து கொண்டிருக்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies