இஸ்ரேலின் பயங்கர தாக்குதல்களால் காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியதிலிருந்து இஸ்ரேல், காசா, ராஃபா உள்ளிட்ட நகரங்கள் மீது இடைவிடாது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதன் காரணமாகத் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகக் காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுவரை 1 லட்சத்து 17 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.