சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், திமுக அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை கைவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்த அவர், சுமார் 93 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை மனதார வரவேற்பதாக கூறியுள்ளார்.
மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.