பிரியாணியோடு பீர் பாட்டிலை வைப்பதுதான் திராவிட மாடல் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாதி வாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் ராஜீவ் காந்தி என்றும், மண்டல் கமிஷனுக்கு எதிராக பேசியது காங்கிரஸ் கட்சியினர்தான் என்றும் கூறினார்.
தமிழகத்தில் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்றும், தேர்தலை முடித்து சீக்கிரமாக வீட்டிற்கு செல்ல திமுகவினர் நினைப்பதாகவும் அவர் கூறினார்.
தமிழக முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் சொன்ன எதையுமே செய்யவில்லை குடும்ப பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவேன் என்று வாக்குறுதியில் அறிவித்திருந்தார் அதன் பிறகு தகுதியான பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அது என்ன தகுதி என்பதுதான் எங்களுக்கு புரியவில்லை என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
நீட் தேர்வை கொண்டு வந்த திமுகவே அதனை வேண்டாம் என எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.