மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் வாகனம் பறிக்கப்பட்ட சம்பவம் மற்றும் அவரது குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்ய வேண்டும் எனவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
இத்தொடர்பாகத் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அவர் அளித்த பேட்டியில்,
தமிழகத்தில் காங்கிரஸ் இருக்கிறதா என டவுட் உள்ளது என்றும் காமராஜர் குறித்த பல்வேறு உருவ கேலியை செய்தவர்கள் திமுகவினர் என்று அவர் கூறினார்.
பிள்ளையையும் கிள்ளி தொட்டிலை ஆட்டி விடுவது போல சிவா மூலம் பேசிவிட்டு முதலமைச்சர் யோசித்து வருகிறார். காங்கிரஸ் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் இல்லை, இருந்தால் தானே தெரிவிப்பார்கள் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்
மேசமான நிலைக்கு நிறுவனங்கள் செல்வதன் காரணமே மின் கட்டண உயர்வுதான் என்றும்
மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் வாகனம் பறிக்கப்பட்ட சம்பவம் மற்றும் அவரது குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்ய வேண்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதே எங்கள் கோரிக்கை. ஒரு டிஎஸ்.பிக்கு இந்த நிலை என்றால் மற்ற காவலர்கள் எப்படி பணியாற்றுவார்கள் என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.