கரூரில் உள்ள மாயனூர் கதவணைக்கு 98 ஆயிரத்து 934 கன அடி நீர்வரத்து உள்ளதால் காவிரி கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், கரூரில் உள்ள மாயனூர் கதவணைக்கு 98 ஆயிரத்து 934 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதில் 97 ஆயிரத்து 464 கன அடி நீர் காவிரி ஆற்றிலும், 650 கன அடி நீர் தென்கரை வாய்க்காலிலும், 400 கன அடி தண்ணீர் கட்டமேட்டு வாய்க்காலிலும், 20 கன அடி தண்ணீர் கிருஷ்ணராயபுரம் வாய்க்காலிலும் திறந்து விடப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் மாயனூர் கதவணை கடல்போல் காட்சியளிக்கிறது. மேலும், காவிரி கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.