குடும்பம் குடும்பமாக வெளியேறிய தொழிலாளர்கள் : குப்பை நகரமாக மாறுகிறதா குருகிராம்?
Sep 13, 2026, 02:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

குடும்பம் குடும்பமாக வெளியேறிய தொழிலாளர்கள் : குப்பை நகரமாக மாறுகிறதா குருகிராம்?

Murugesan M by Murugesan M
Jul 28, 2025, 08:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவின் வளர்ச்சியடைந்த நகரங்களில் ஒன்றாக அறியப்படும் குருகிராம் துர்நாற்றம் வீசும் குப்பை நகரமாகவே மாறிவிட்டது. வாழ்வாதாரத்திற்காக வந்த தொழிலாளர்கள் கூட்டம், கூட்டமாக வெளியேறி வரும் நிலையில், தன்னிலையை இழந்து தவிக்கிறது இந்நகரம்.

ஓங்கி உயர்ந்த கட்டடங்கள், வசதியான அடுக்குமாடிக் குடியிருப்புகள், தொழில்நுட்ப பூங்காக்கள், நவீன போக்குவரத்து வசதிகள் என அடுத்த சிங்கப்பூராகவே பார்க்கப்பட்டதுதான் இந்தியாவின் Cyber Hub-ஆன குருகிராம்.

ஆனால் தற்போதோ அதன் நிலைமையே வேறு, எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற காமெடிக்கு பொருந்திப் போய்விட்டது , இந்த நகரம். மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளாலும், துர்நாற்றம் வீசும் சாலைகளாலும் நிரம்பியுள்ள குருகிராம் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. குறிப்பாக அங்குள்ள Ardee city கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வெளிநாட்டினரை வெளியேற்ற மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியேற்ற தடுப்பு சட்டம் இங்கு மிக தீவிரமாக அமல்படுத்தப்பட்டதே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.  குருகிராம் பகுதிகளில் சுகாதார பணிகளில் ஈடுபடும் பெரும்பாலானோர் பெங்காலி மொழி பேசுபவர்கள் தான்… வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்களும் பெங்காலி மொழியையே பேசுவதால், வெளிநாட்டினர் எனக் கருதி போலீசார் அழைத்துச் சென்றுவிடுகிறார்கள் என்பது பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது.

உரிய ஆவணங்கள் இருந்தாலும், போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்து, குருகிராமிற்கு வாழ்வாதாரத்திற்காக வந்த தொழிலாளர்கள் பலர் குடும்ப குடும்பமாக சொந்த ஊருக்கே திரும்பி வருகின்றனர். சுகாதார பணிகளில் இருந்த பல தொழிலாளர்கள் வெளியேறியதன் காரணமாக, குருகிராம் சுகாதார சீர்கேட்டில் சிக்கியுள்ளது.

குப்பைகளை அகற்றும் பணி முடங்கியதால், குடியிருப்பு பகுதிகள், சாலைகள் என எங்கெங்கும் மலைபோல் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் வாழ்வதற்கே தகுதியற்ற நகரமாக குருகிராம் மாறி வருவதாக இணையவாசிகள் பலரும் தங்களது ஆதங்கத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.

எனினும், வங்கதேசத்தவர் இல்லை என ஆதாரங்களுடன் நிரூபித்தால், யாரையும் தாங்கள் எந்த விதத்திலும் துன்புறுத்துவதில்லை என்றும், உரிய ஆய்வு நடத்திய பிறகு, அவர்களைத் தொடர்ந்து இங்கேயே தங்க அனுமதிப்பதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

நாளுக்கு நாள் குப்பைகள் மலைபோல் சேர்ந்து வரும் நிலையில், அவற்றை அகற்ற அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே குருகிராம் வாசிகளின் கோரிக்கை.

Tags: Workers leaving in droves: Is Gurugram becoming a garbage city?குப்பை நகரமாக மாறுகிறதா குருகிராம்?வெளியேறிய தொழிலாளர்கள்குருகிராம்
Share
Tweet
SendShare
Previous Post

காசாவில் கடும் உணவுப் பஞ்சம் : தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம்!

Next Post

ஆப்ரேஷன் சிந்தூர் ஓயவில்லை, தொடரும்..! – ராஜ்நாத் சிங்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies