ஆப்ரேஷன் சிந்தூர் ஓயவில்லை, தொடரும்..! - ராஜ்நாத் சிங்
Jul 29, 2026, 08:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆப்ரேஷன் சிந்தூர் ஓயவில்லை, தொடரும்..! – ராஜ்நாத் சிங்

Murugesan M by Murugesan M
Jul 28, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் நோக்கம் நிறைவேறியதால் பாகிஸ்தான் உடனான யுத்தம் நிறுத்தப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்  நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். எந்தவொரு அழுத்தத்தாலும் யுத்தத்தை நிறுத்தவில்லை என்றும் எதிர்க்கட்சிகளுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்தியா மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனாலும், அது பற்றிய எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் நாடாளுமன்ற மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்குத் தலைவணங்குவதாகக் கூறினார்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை இந்திய இறையாண்மையின் அடையாளம் என்று குறிப்பிட்ட அவர், நமது ராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் தற்காப்புக்காகவே இருந்ததாகத் தெளிவுபடுத்தினார். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில்  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கிய 9 தீவிரவாத முகாம்கள் 22 நிமிடங்களில் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால்,100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறிய ராஜ்நாத்சிங், உண்மையில் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார். தொழில்நுட்ப ரீதியாகவும், ராணுவ பலம் ரீதியாகவும் இந்தியாவின் வல்லமையை ஆப்ரேஷன் சிந்தூர் உலகிற்குப் பறைசாற்றியதாகக் கூறிய ராஜ்நாத் சிங், இந்தியாவின் வலிமையான வான் தடுப்பு அமைப்புகள் மூலம் பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி முற்றிலுமாக முறியடிக்கப்பட்டது என்றார்.

மே 10ம் தேதி பாகிஸ்தான் விமானப்படைத் தளத்தை இந்திய ராணுவம் தகர்த்ததை அடுத்து பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக் கொண்டதாகவும், போரை நிறுத்தும்படி முதலில் கோரிக்கை விடுத்து இந்தியாவிடம் மன்றாடியதாகவும் அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.

எல்லையைக் கைப்பற்றவோ, போரைத் தூண்டுவதற்காகவோ ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்படவில்லை என்று கூறிய அவர், பாகிஸ்தான் பல ஆண்டுகளாக வளர்த்து வந்த பயங்கரவாதக் குழுக்களை ஒழிப்பதே ராணுவத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார். இந்தியாவின் நோக்கம் நிறைவேறியதால் யுத்தம் நிறுத்தப்பட்டதே தவிர, எந்தவொரு அழுத்தத்தாலும் நிறுத்தப்படவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

இந்தியப் போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதா என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புவதாகக் கூறிய ராஜ்நாத்சிங், ஒருமுறைகூட எத்தனை எதிரி விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று கேள்வி எழுப்பவில்லை என்று கவலை தெரிவித்தார். இந்தக் கேள்வி நாட்டின் தேசிய உணர்வுகளைப் பிரதிபலிக்கவில்லை என்றே எண்ணுவதாகவும் குறிப்பிட்டார்.

ஒரு இலக்கை நோக்கி நகரும்போது நடக்கும் சிறுசிறு விஷயங்களைப் பெரிதாக்கக் கூடாது என்று தெரிவித்த அவர், நாட்டின் பாதுகாப்பே முக்கியம் என்று உறுதிப்படக் கூறினார். 1962ம் ஆண்டு சீனப் போரின்போது பாஜக எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும்போது நாட்டின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளார்களா? என்றுதான் கேள்வி எழுப்பினோமே  தவிர, ராணுவத் தளவாடங்கள் அழிக்கப்பட்டதா என்று கேட்கவில்லை என்று குறிப்பிட்டார்.

1971ம் ஆண்டு போரில் பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுத்ததை வாஜ்பாய் பாராட்டியதாகக் கூறிய ராஜ்நாத்சிங், எத்தனை விமானங்களை இழந்தோம் என்று கேட்கவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

Tags: it will continue..! - Rajnath Singhpakistanராஜ்நாத் சிங்Operation SindoorOperation Sindoor has not ended
ShareTweetSendShare
Previous Post

குடும்பம் குடும்பமாக வெளியேறிய தொழிலாளர்கள் : குப்பை நகரமாக மாறுகிறதா குருகிராம்?

Next Post

சதுரங்க நாயகி திவ்யா தேஷ்முக்!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies