அலறும் அஜர்பைஜான் : இந்திய ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஆர்மேனியா!
Sep 13, 2026, 02:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அலறும் அஜர்பைஜான் : இந்திய ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஆர்மேனியா!

Murugesan M by Murugesan M
Jul 29, 2025, 08:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானை அலறவிட்ட இந்தியாவின் அதிநவீன ஆயுத தளவாடங்களை கொள்முதல் செய்ய ஆர்மேனியா அதிக ஆர்வம் காட்டி வருகிறது.  ஆர்மேனியாவின் இந்த நடவடிக்கை, எதிரி நாடான அஜர்பைஜானையும், அதற்கு உதவும் துருக்கி, பாகிஸ்தான் நாடுகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

2014ம் ஆண்டிலிருந்து, பிரதமர் மோடி தலைமையில் புதிய இந்தியா கட்டமைக்கப்பட்டது. புவிசார் அரசியல் மற்றும் பொருளாதாரம் இரண்டிலும் உலகின் ஒரு பெரிய பங்கைக் கொண்டிருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்தியா தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

2015 ஆம் ஆண்டு, அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி (SAGAR) என்ற கொள்கை திட்டத்தைப் பிரதமர் மோடி, அறிமுகப் படுத்தினார். இந்தியாவின் புதிய கடல்சார் பார்வை, சர்வதேச நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

தொடர்ந்து, பிரதமர்  மோடியும் ஆர்மீனிய பிரதமர் ( Nikol Pashinyan ) நிகோல் பாஷினியனும் 2019 ஆம் ஆண்டு நியூயார்க்கில் சந்தித்தனர். அதன்பிறகு புவிசார் அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை இந்தியா ஏற்படுத்தியது.  2020ம் ஆண்டு, (Karabakh ) கராபாக் போருக்குப் பிறகு இந்தியாவுக்கும்  ஆர்மீனியாவுக்கும்  இடையிலான உறவு வலிமை பெற்றது. அந்தப் போரில், அஜர்பைஜானுக்கு  ஆதரவாக, துருக்கியும் பாகிஸ்தானும் நின்றன.

ஆர்மீனியாவுக்கு எதிராக அஜர்பைஜான் இராணுவத்துடன் பாகிஸ்தானின் சிறப்புப் படைகள் களத்தில் நின்று செயல்பட்டன.  2017ம் ஆண்டிலேயே  அஜர்பைஜான் மற்றும் துருக்கியுடன் முத்தரப்பு ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ளது.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாக, ஆர்மேனியா மற்றும் ஈரானுடன் இந்தியா ஒரு முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்தச் சூழலில், ஐரோப்பாவில் மிகச் சிறிய நாடான ஆர்மீனியா, இந்தியாவின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக மாறியது.

முன்னதாக ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்துவந்த ஆர்மேனியா, கடைசியாக 2021ஆம் ஆண்டு ரஷ்யாவுடன்  400 பில்லியன் டாலர் மதிப்பில் ஆயுத இறக்குமதிக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தியது. ஆனால் அதில் ஓரளவு மட்டுமே  நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவுக்கும் ஆர்மேனியாவுக்கும் இடையே 2020 ஆம் ஆண்டில் 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. அதன் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஆண்டுதோறும் வலுவடைந்து வருகின்றன. அஜர்பைஜானிடமிருந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக, இந்தியாவிடமிருந்து மேம்பட்ட ஆயுதங்களை ஆர்மீனியா வாங்கி வருகிறது.

இந்த ஒப்பந்தங்களில் 214 மில்லிமீட்டர் Pinaka multiple rocket launchers,155 மில்லிமீட்டர்  Advanced Towed Artillery Gun System என்ற பீரங்கி அமைப்புகள், Zen Anti Drone System என்ற எதிர்-ட்ரோன் அமைப்புகள், ஆகாஷ்-1S மற்றும்   ஆகாஷ்-NG வான் பாதுகாப்பு அமைப்புகள், Konkurs anti-tank missile systems, மற்றும் பல்வேறு வெடிமருந்துகள் ஆகியவற்றை ஆர்மேனியா இந்தியாவிடமிருந்து கொள்முதல் செய்கிறது.

2022-ல் கையெழுத்திடப்பட்ட 720 மில்லியன் டாலர் மதிப்புடைய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஆகாஷ்-1S வான் பாதுகாப்பு அமைப்புக்களின் முதல் தொகுதி  கடந்த நவம்பரில் ஆர்மேனியாவிற்க அனுப்பப்பட்டது. அடுத்த தொகுதி இந்த மாதத்தில் அனுப்படவுள்ளது .

இந்தியாவுடனான ஆர்மேனியாவின் ஆயுத இறக்குமதி ஒப்பந்தங்கள்,  ரஷ்யாவை அரசியல் ரீதியாக சார்ந்திருப்பதைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டது என்று கூறப்படுகிறது.   ஆர்மேனியா தனது பாதுகாப்புத் திறன்களை நவீனமயமாக்கும் அவசரத் தேவையில் உள்ளது.   விலையுயர்ந்த மேற்கத்திய ஆயுதங்களுடன் ஒப்பிடும் போது, குறைவான விலையில், தரமான ஆயுதங்களை உற்பத்தி செய்யும் இந்தியாவை நோக்கி ஆர்மேனியா திரும்பியது.

சமீபத்தில் ஆர்மேனியாவின் Colonel Mher Israelian தலைமையிலான குழு,  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட AK-203 தாக்குதல் துப்பாக்கிகளின் திறன்களை மதிப்பிட்டு வாங்க இந்தியா வந்துள்ளது. ஆயுத தளவாடங்கள், பராமரிப்பு மற்றும் பயிற்சி ஆகியவற்றில் இந்தியாவின் உதவியை ஆர்மேனியா  நாடுகிறது. இந்தியாவும் ஆர்மேனியாவுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க முன்வந்துள்ளது.

கடந்த ஆண்டில் இருந்து  ரஷ்யா, ஆர்மேனியா, பெலாரஸ், கஜகஸ்தான், மற்றும் கிர்கிஸ்தான்  உறுப்பினராக உள்ள Eurasian Economic Union அமைப்பின் பார்வையாளர் நாடாக இந்தியா உள்ளது.  யூரேசிய பொருளாதார ஒன்றியத்துடன் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையையும் இந்தியா  நடத்தி வருகிறது.

வேகமாக மாறிவரும் புவிசார் அரசியலில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான எதிர்கால போக்குவரத்து பாதைகளின் சாத்தியமான பகுதியாக  ஆர்மேனியாவை இந்தியா பார்க்கிறது. இது, துருக்கியின் செல்வாக்கு மிகுந்த இடத்தில் ஆழமாகக் காலூன்றும் இந்தியாவின் ராஜதந்திரமாகும்.

இதற்கிடையே, இருநாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, துருக்கிக்கு மட்டுமல்ல பாகிஸ்தானுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: Azerbaijan is screaming: Armenia is buying and stockpiling Indian weaponsஅலறும் அஜர்பைஜான்ஆர்மேனியா
Share
Tweet
SendShare
Previous Post

குழந்தையில்லா தம்பதியை குறிவைக்கும் கும்பல் : IVF முறையில் பகீர் மோசடி – பரபரப்பு பின்னணி!

Next Post

ஆப்ரேஷன் மகாதேவ் வெற்றி : பஹல்காம் தீவிரவாதிகளை பழி தீர்த்த இந்திய ராணுவம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies