பராக் ஒபாமாவை சீண்டும் டிரம்ப் : AI சித்தரிப்பால் மீண்டும் சர்ச்சை!
Oct 28, 2026, 08:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பராக் ஒபாமாவை சீண்டும் டிரம்ப் : AI சித்தரிப்பால் மீண்டும் சர்ச்சை!

Murugesan M by Murugesan M
Jul 28, 2025, 07:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பற்றிய சர்ச்சைக்குரிய பதிவால் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்…. அண்மையில்  ஒபாமா கைது செய்யப்படுவது போல் டிரம்ப் வெளியிட்ட ஏஐ வீடியோ இணையத்தில் புயலைக் கிளப்பிய நிலையில், தற்போதைய பதிவும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

1994ம் ஆண்டு அமெரிக்காவில் கொலை வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட அமெரிக்கக் கால்பந்து ஜாம்பவானும், நடிகருமான OJ Simpson, WHITE BRONCO காரில் தப்பிச் சென்ற காட்சிகள்தான் இவை…. 1960-70ம் ஆண்டுகளில் கால்பந்து வீரராக புகழ்பெற்ற OJ Simpson, அதன்மூலம் ஹாலிவுட் திரையுலகில் கால்பதித்தவர். The Naked Gun series, Capricorn One, and The Towering Inferno போன்ற திரைப்படங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர்.

1994ம் ஆண்டு தனது முன்னாள் மனைவி நிக்கோல் பிரவுன் சிம்சன், ரொனால்ட் கோல்ட்மேன் கொலை வழக்கில் சிக்கியபோது WHITE BRONCO காரில் தப்பிச் சென்ற காட்சிகள் தொலைக்காட்சிகளில் நேரலை செய்யப்பட்டன. பல கிலோ மீட்டர்கள் பின் தொடர்ந்த போலீசார் இறுதியில் அவரை கைது செய்தனர்.

அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் காட்சியை,  முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா போலீசாரிடம் இருந்து தப்பிப்பது போல் சித்தரித்து  வெளியிட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

அதில் OJ Simpson போன்று  WHITE BRONCO காரில் ஒபாமா தப்பிச் செல்ல, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், போலீசார் பின்னால் துரத்துவது போலவும்  காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருப்பது நெட்டிசன்களின் விமர்சனங்களுக்கு  தீனி போட்டுள்ளது.

அண்மையில் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை கைது செய்வது போன்ற AI வீடியோவை டொனால்ட் ட்ரம்ப் பகிர்ந்தது அமெரிக்க அரசியலில் புயலைக் கிளப்பியது. இந்தக் குற்றச்சாட்டுக்கும் AI வீடியோவுக்கும் பதிலளித்த முன்னாள் அதிபர் ஒபாமா, ட்ரம்பின் விநோதமான குற்றச்சாட்டுகள் அபத்தமானவை.

அவர் மீது இருக்கும் பாலியல் வழக்கைத் திசை திருப்பும் பலவீனமான முயற்சி என்று கடுமையாகச் சாடியிருந்தார்.  இந்த நிலையில் ஒபாமாவைச் சீண்டும் வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள காட்சிகள் பலதரப்பு மக்களின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

Tags: obamaTrump slams Barack Obama: Controversy again over AI portrayalபராக் ஒபாமாவை சீண்டும் டிரம்ப்முன்னாள் அதிபர் பராக் ஒபாமாAmerica news today
Share
Tweet
SendShare
Previous Post

விளை நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை : கொந்தளிக்கும் விவசாயிகள்!

Next Post

காசாவில் கடும் உணவுப் பஞ்சம் : தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம்!

Related News

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மதுரை – குருவாயூர் ரயிலில் ‘விஸ்டாடோம்’ பெட்டி : மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை ரசிக்கும் பயணிகள் சிறப்பு தொகுப்பு!

மேற்காசிய போருக்கு முடிவு எப்போது? அடிபணிய மறுக்கும் ஈரான் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies