தீயசக்தி திமுகவை அகற்றும் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி துயிலுறாது : நயினார் நாகேந்திரன்
Jan 18, 2026, 07:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தீயசக்தி திமுகவை அகற்றும் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி துயிலுறாது : நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
Aug 14, 2025, 12:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்கள் நலனின் குரலாகத் தொகுதிதோறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

₹170 கோடி செலவில் நடைபெற்றதாகக் கணக்கு காட்டப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் மூன்றாண்டுகளாகியும் முறையாக நடைமுறைக்கு வராதது துவங்கி, குண்டும் குழியுமான சாலைகள், சேறும் சகதியுமான சந்தைகள், குப்பைக் குளமான தெருக்கள் எனப் பல்வேறு சீர்கேடுகளில் சிக்கித் தவித்து வருகிறது பொள்ளாச்சி.

ஆனால், இவற்றையெல்லாம் தனது அலட்சியத்தால் கண்டுகொள்ளாததோடு, வரிகளை உயர்த்துவது, வரிவசூலில் முறைகேடு புரிவது என்பது போன்ற அராஜகப் போக்கில் ஈடுபடும் திமுக அரசைக் கண்டித்து தமிழக  பாஜக மற்றும் அதிமுக சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

திராவிட மாடலின் திறனற்ற நிர்வாகத்தை எதிர்த்தும், பொள்ளாச்சி வாழ் மக்களின் உரிமைக் குரலாக ஒலிக்கும் விதமாகவும் சிறப்பாக போராட்டத்தை முன்னெடுத்த தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களான பொள்ளாச்சி அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்வி. ஜெயராமன் கிணத்துகடவு அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்.

தாமோதரன், அஇஅதிமுக நகரத் தலைவர் திரு. கிருஷ்ணகுமார் அவர்கள், நமது பாஜக கோவை தெற்கு மாவட்டத் தலைவர் திரு. சந்திரசேகர், முன்னாள் கோவை தெற்கு மாவட்டத் தலைவர் வசந்தராஜன்  ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

தமிழகத்தை சீர்குலைக்கும் திமுக அரசை எதிர்த்து இன்று பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆர்பாட்டம் வெறும் ஆரம்பப் புள்ளியே!, இதே போன்று தொடர்ந்து பல அறவழிப் போராட்டங்களின் வழி தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் திமுக அரசால் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளும் வெளிக்கொணரப்படும்.

மக்கள் நலனின் குரலாகத் தொகுதிதோறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்படும். முன்னேற்றத்தைத் தடுக்கும் மக்கள் விரோத திராவிட மாடல் அரசை ஒட்டுமொத்தமாக அகற்றும் வரை எங்கள் கூட்டணி அயராது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: tn govtNational Democratic Alliance will not rest until the evil forces remove DMK: Nayinar NagendranDMKADMKMK Stalintn bjpநயினார் நாகேந்திரன்
ShareTweetSendShare
Previous Post

துணைவேந்தர் நியமனத்தில் தாமதம் ஏற்பட தமிழக அரசின் சட்ட திருத்தமே காரணம் – உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் பதில்

Next Post

அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற தடை விதிக்க கோரிய மனு முடித்துவைப்பு!

Related News

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies