திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியிருப்பதால் மாணவர்கள் சிரமதிற்குள்ளாகி வருகின்றனர்.
பள்ளி வளாகத்தில் தனியார் சிமெண்ட் தொழிற்சாலை நிர்வாகம் ஆக்கிரமித்துக் கட்டியுள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் இருப்பதாகவும் மாணவர்களின் பெற்றோர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படப்படவில்லை என்று குற்றஞ்சாட்டி உள்ள மாணவர்களின் பெற்றோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.