ஆப்கானை நிலைகுலைய வைத்த நிலநடுக்கம் : அதிகரிக்கும் உயிரிழப்பு - உதவிக்கரம் நீட்டிய இந்தியா!
Sep 12, 2026, 11:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆப்கானை நிலைகுலைய வைத்த நிலநடுக்கம் : அதிகரிக்கும் உயிரிழப்பு – உதவிக்கரம் நீட்டிய இந்தியா!

Murugesan M by Murugesan M
Sep 2, 2025, 08:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 400-ஐ கடந்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

ஏற்கனவே, பொருளாதார மந்தநிலை, சுற்றுலாத்துறை வீழ்ச்சி, பாகிஸ்தானுடன் மோதல், பயங்கரவாதம் உள்ளிட்டவற்றால் அந்நாடு பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், தன் பங்கிற்குக் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த நிலநடுக்கம்.

ஆகஸ்ட் 31ம் தேதி, நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் பகுதியில் இருந்து 27 கிலோமீட்டர்த் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி 11.47 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரிக்டர் அளவில் 6-ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் பயங்கரமாகக் குலுங்கின. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடுவதற்குள், பல கட்டங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கிக்கொள்ளவே, என்ன செய்வது எனத் தெரியாமல் மற்றவர்கள் தவிக்கத் தொடங்கினர்.

இந்தக் கோர சம்பவம் நடந்து சிறிது நேரம்தான் கடந்திருக்கும். அதற்குள் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டு நிலைமையை இன்னும் மோசமாக்கியது. இது ரிக்டரில் 4.7 என்ற அளவில் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நிலநடுக்கத்தால் பலத்த சேதமடைந்தபோதும், கீழே விழாமல் நூலிழையில் தப்பித்த பல கட்டடங்கள் இந்தமுறைச் சீட்டு கட்டுபோல் சரிந்து விழுந்தன. இதில் மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கிக்கொண்டனர்.

குனார் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்களில் உள்ள சோகி, வாட்பூர், நூர் குல், மனோகி, சபா தாரா மாவட்டங்கள் இந்த அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

2 நாட்கள் கடந்த நிலையிலும் மீட்பு பணிகள் இதுவரை ஓய்ந்தபாடில்லை. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அடுத்தடுத்து ஆயிரக்கணக்கில்
சடலங்கள் மீட்கப்பட்டபடியே உள்ளன. தற்போதுவரை ஆயிரத்தி 400க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

சடலங்களை மீட்க ஒருபுறம் மீட்புபடைப் போராடி வருகிறது என்றால், படுகாயமடைந்தவர்களுக்குப் போதிய சிகிச்சை வழங்க முடியாமல் மருத்துவமனைகள் திணறி வருகின்றன. மருந்து தட்டுப்பாடு, மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பலர் உரிய சிகிச்சைக் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

நிலைமையைச் சமாளிக்க முடிந்த வரைப் போராடிய தாலிபான் அரசு, உதவிக்கரம் நீட்ட வேண்டும் என உலக நாடுகளிடம் கையேந்தியது. உதவி கேட்டதுதான் தாமதம். பல்வேறு உலக நாடுகள் டன் கணக்கில் அடுத்தடுத்து நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்து வருகின்றன. இந்தியாவில் இருந்து 15 டன் உணவுப் பொருள்கள், உயிர்காக்கும் மருந்துகள், அத்தியாவசிய பொருட்கள், 1,000 கூடாரங்கள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

துரிதமான மீட்பு நடவடிக்கையால் முடிந்தவரை உயிரிழப்பு எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதுதான் தற்போதைக்கு பலரது எதிர்பார்ப்பு.

Tags: Earthquake shakes Afghanistan: Death toll rises - India extends helping handஆப்கானை நிலைகுலைய வைத்த நிலநடுக்கம்ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
Share
Tweet
SendShare
Previous Post

செக் வைத்த பிரதமர் மோடி : உருவான புதிய கூட்டணி – பணிந்த அமெரிக்கா!

Next Post

நகரும் இரும்புக் கோட்டை கிம் ஜாங் உன்னின் கவச ரயிலின் சிறப்பு என்ன? – Barbecue உணவகம் TO ஹெலிகாப்டர் வரை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies